பின்கதவால் வெளியேறிச் சென்ற ஞானசார தேரர்! முன்கதவில் காத்திருந்த ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம்!

221shares

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று நேரத்துக்கு முன்பாக சிறைச்சாலையிலிருந்து வெளியேறியு ள்ளார். அவர் சிறைச்சாலையின் பின்பக்க வழியாக சென்றதால் அவரின் வருகையை எதிர்பார்த்திருந்த ஆதரவாளர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான அனுமதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விடுத்திருந்த நிலையில் அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு தனக்கு கிடைத்திருப்பதாக சிறைச்சாலைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளரான துஷார உப்புல்தெனிய எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்கள், பொதுபல சேனா அமைப்பின் ஆதரவாளர்கள், பிக்குமார்கள் எனப் பலரும் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக திரண்டிருந்த நிலையிலேயே அவர் பின்கதவால் சென்றுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க