வடகிழக்கு வான்வெளியில் உள்ளூர் விமானங்கள்! குறைந்த விலையில் கொழும்புக்கு பறக்கலாம்?

481shares

இலங்கையின் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, சிகிரியா ஆகிய பகுதிகளுக்கு உள்ளூர் விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நிவாரண விலையில் பொதுமக்களுக்காக உள்ளுர் விமான சேவைகளை மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டமொன்று இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து நிதி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்கிணைவாக மட்டக்களப்பு, திருகோணமலை, சிகிரியா, பலாலி உள்ளிட்ட விமான நிலையங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பலாலி விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தை தரையிறக்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை பிராந்திய வானூர்தித் தளமாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க