சிறிலங்காவில் ஊடுருவியுள்ள வெளிநாட்டு இராணுவம்! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இராணுவ பதில் பேச்சாளர்

334shares

ஐக்கிய நாடுகளின் இராணுவத்தினர் ஸ்ரீலங்காவிற்குள் பிரவேசித்திருப்பதாக வெளியாகின்ற செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று ஸ்ரீலங்கா இராணுவம் அறிவித்திருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ வாசகம் பொறிக்கப்பட்ட கனரக வாகனங்கள் ஸ்ரீலங்காவின் தென்னிலங்கை வீதிகளில் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்திருக்கின்றன.

இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா இராணுவம் இதற்கு பதிலளித்திருக்கிறது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன,

இந்த புகைப்படங்களில் தோன்றுகின்ற ஐ.நா பாதுகாப்புப் படையின் கனரக வாகனங்கள் ஸ்ரீலங்காவிலிருந்து மாலி தீவுகளுக்கு புறப்படவிருந்தபோது எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் என்றார்.

மாறாக வெளிநாட்டுப் படைகள் ஸ்ரீலங்காவிற்குள் பிரவேசித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்