மகிந்தவின் கோட்டைக்குள் கால்பதிக்கிறது இஸ்ரேல்!

672shares

எதிர்க்கட்சித்தலைவர் மகிந்தராஜபக்சவின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் இஸ்ரேல் கால்பதிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம்.

கடந்த 21 ஆம் திகதி நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் ஹம்பாந்தோட்டை ரன்மின்தென்னபகுதியில் இஸ்ரேலுக்கு நிலமொன்றை வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

கொக்கோ திட்டத்துக்காகவே இந்த நிலத்தை வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த கொக்கோ திட்டத்தை நடத்தவுள்ள கம்பனியின் பெயர் பின் என்பதாகும்.இது உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற ஒரு கம்பனியாகும்.இந்தக் கம்பனி ஸ்ரீலங்காவின் உள்ளூர் நிறுவனமான வோல்ஸ்ரார் கோப் உடன் இணைந்து தனது செயற்பாட்டை மேற்கொள்ளவுள்ளது.

இந்த காணி வழங்கல் தொடர்பில் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதிலும் இது தொடர்பான சாத்தியக்கூற்று அறிக்கை தயாரிப்பு தாமதமாகியதால் தாமதப்படுத்தப்பட்டது. இந்த அறிக்கை தயாரிக்க ஆறு மாதங்கள் ஆனதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை துறைமுகங்கள் கப்பல் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க சமர்ப்பித்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!