யாழில் “தனு ரொக்”கின் பிறந்த நாள் கொண்டாட்டம்! சிவில் உடையில் களமிறங்கி அனைவரையும் கைது செய்த பொலிஸார்

435shares

மானிப்பாய் மற்றும் நவாலிப் பகுதிகளில் வைத்து வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தனு ரொக் மற்றும் தேடப்பட்டு வந்தவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரும் சனிக்கிழமை மாலை வேளையில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“தனு ரொக்”கின் பிறந்த நாள் என்ற தகவலை அறிந்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவினர் மானிப்பாய் பகுதியில் சிவில் உடையில் களமிறக்கப்பட்டனர்.

அந்த வகையில் மானிப்பாயில் தனு ரொக்கின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு பின்பக்கமாக உள்ள குளக்கட்டுப் பகுதியில் பிறந்த நாள் கொண்டாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனையடுத்து நவாலி வயல் வெளி பகுதியில் வைத்து தனு ரொக்கின் மற்றொரு பகுதியினர் பிறந்த நாள் கொண்டாடிய போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் தனு ரொக்கும் அடங்குவார். கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு மட்டும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவர்கள் இருவரும் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்தனர். மேலும், தனுரொக் உள்ளிட்ட சிலர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள்.

கைது செய்யப்பட்ட 9 பேரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார்கள்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க