சிறிலங்காவில் இருந்து தப்பிய ஐ.எஸ் தீவிரவாதிகள்! இந்தியாவிற்குள் ஊடுருவல்? கடும் உசார்நிலையில் கரையோர பாதுகாப்பு படை

33shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் படகு ஒன்றில் இலட்சதீவு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக, கிடைத்த புலனாய்வு அறிக்கைகளை அடுத்து, இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இதற்கமைய கேரள மாநில கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேரள மாநில கரையோர காவல் நிலையங்கள் மற்றும் கரையோர மாவட்டங்களில் காவல்துறை தலைவர்களுக்கே, இதுபற்றிய முன்னெச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற எச்சரிக்கைகள் வழக்கமானதே என்ற போதும், இம்முறை தீவிரவாதிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவலும் இடம்பெற்றுள்ளதால், சந்தேகத்துக்குரிய கப்பல்கள், படகுகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இருந்து, கடந்த மே 23ஆம் திகதி கிடைத்த புலனாய்வு அறிக்கையைத் தொடர்ந்து, இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க