கொழும்பில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டை!

393shares

அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினரும் , காவல்துறை யினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.

சிறிலங்கா காவல்துறையினருடன், 3000 இற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும், இது போன்ற தேடுதல்கள், பிராந்திய பாதுகாப்பு படை தலைமையகங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா இராணுவ பதில் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!