முன்பள்ளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிசக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்பு!

739shares

கெக்கிராவ பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த முன்பள்ளி பாடசாலை கட்டடமொன்றின் அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு தொகை வெடிபொருள்களுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர்கள் மடாடுகம பகுதியைச் சேர்ந்தவர்களென்றும் அவர்களில் ஒருவர் கட்டடத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்றி வந்துள்ளதுடன், இந்தக் கட்டடத்திலிருந்து C 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிபொருள் 168 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வயர்கள், டெட்டனேட்டர், தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட பிரிவினைவாத மத புத்தகங்கள் 5 என்பன இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் பல மாவட்டங்களில் 26ஆம் திகதியான இன்றும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படையினரும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன கூறியுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில், 24 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!