அவசரகால சட்டம்! தமிழர்களின் செயற்பாடுகளை முடக்க தீவிர முயற்சியில் அரசாங்கம்!

160shares

பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக தமிழர்களின் செயற்பாடுகளை முடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம், மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.ஸ்ரீலங்காவில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவங்களை அடுத்து நிலைமைகளை கட்டுப்படுவத்துவதற்காக அவசரகால தடைச்சட்டம் அமுல்ப் படுத்தப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க