எந்தவித மாற்றுக் கருத்துமின்றி தூக்கிலிடப்பட வேண்டும்! எஸ்.எம். மரிக்கார்

679shares

குருணாகலில் கைது செய்யப்பட்ட வைத்தியர், அதிகளவு சொத்துக்களை சம்பாதித்தமை மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பாகவும், தாய்மார்களுக்கு தவறான சிகிச்சை செய்தமைக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அதனால் குறித்த வைத்தியரை தூக்கிலிட வேண்டும் எனவும் இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை எனவும் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டிய பகுதியில் நடைபெற்ற கம்பெரலிய திட்டத்தில் பங்குபற்றிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு எனவும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க