அடிப்படை மனிதவுரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யவுள்ள வைத்தியர் சியாப்தீனின் மனைவி! (செய்திப் பார்வை)

  • Jesi
  • June 09, 2019
71shares

பெருந்தொகையான பெண்களுக்கு கருத்தடை சிகிச்சையை மேற்கொண்டதாக கூறி தமது கணவர் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக குருநாகல் வைத்தியர் மொஹமட் செய்கு சியாப்தீனின் மனைவி அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யவுள்ளார். என்ற செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இன்னொரு செய்தியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த விசேட விசாரணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 21ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது. மறுநாள் ஜனாதிபதியினால் விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இதுவரை இரண்டு இடைக்கால அறிக்கைகளை சமர்பித்திருக்கும் அக்குழு தன்னுடைய மூன்றாவது அறிக்கையினை அடுத்தவாரமளவில் ஜனாதிபதியிடம் கையளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ற செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.

மற்றுமொரு செய்தியாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். என்ற செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.

இன்னொரு செய்தியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாதி கிடையாது. ஆகையினாலேயே அவருடன் இணைந்து பயணிக்கின்றேன்.” என்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். என்ற செய்தி ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு செய்தியாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், முன்னாள் ஆளுனர்களான ஹிஷ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோருக்கான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறித்த மூவருக்கும் எதிராக இதுவரை 5 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ரிசாத், ஹிஸ்புல்லாஹ், அசாத் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை செய்ய பொலிஸ் தலைமையகத்தில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. மூன்று சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய இந்த குழு கடந்த 4 ஆம் திகதி முதல் செயற்பட்டு வருகிறது. இதுவரை கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

மற்றுமொரு செய்தியாக ஈஸ்டர் தின குண்டு தாக்குதலில் சங்ரிலா ஹோட்டலில் வைத்து குண்டை வெடிக்கச்செய்த தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் 2013ஆம் ஆண்டு பித்தளை, இரும்பு மற்றும் அலுமினிய பொருட்கள் அடங்கிய கொள்கலனை திருடியுள்ளார் என கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் பொலிஸ் கோவைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபர், குண்டு தாக்குதலின் போது சங்ரிலா ஹோட்டலில் வைத்து குண்டை வெடிக்கச்செய்த தெமட்டகொட - பேஸ்லைன் வீதியில் உள்ள மஹவில பார்க் என்ற இடத்தைச் சேர்ந்த மொஹம்மட் இப்ராஹிம் இன்சார் அஹமட் என தெரியவந்துள்ளது. என்ற செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு செய்தியாக முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன், முன்னாள் ஆளுநர்கள் அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், ஒரு சுயாதீன விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களின் குடியுரிமை பறிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்க, தேசிய புத்திஜீவி பிக்குகள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

மற்றுமொரு செய்தியாக மேல் மாகாண ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த அசாத் சாலி, முக்கிய நாடொன்றில் தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன. அத்துரலியே ரதன தேரர் தலைமையிலான பிக்குகள் மற்றும் சிலர் மேற்கொண்டு வந்த போராட்டம் காரணமாக சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிய ஹிஸ்புல்லா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அசாத் சாலிக்கு அநீதி நடந்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்திற்கு விடயங்கள் அவரை வெளிநாடு ஒன்றின் தூதுவராக நியமிக்க, ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளதாக பேசப்படுகிறது. என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க