முஸ்லிம்களின் தாக்குதல் பின்னணியில் அமைச்சர் சம்பிக்க -ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு

115shares

10 வருடங்களுக்கு முன்னர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் பிரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டமையே தற்போதைய நிலைக்கு காரணம் என்கிறார் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்.

பள்ளிவாசல் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனதுரையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

பராக்கிரமபாகு மன்னனின் அரசாங்கத்தில் கூட நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் அங்கம் வகித்தனர். அநுராதபுரம்,பொலநறுவை, கண்டி இராசதானி என இன்றுவரை தொடரும் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் அங்கம் வகித்துக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு அரசாங்கத்தில் தொடர்ச்சியாக அன்னியோன்னியமாக இருந்துவரும் நாம் சிங்கள மக்களுடன் எவ்வித முரண்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.ஒரே சகோதரர்களாக வாழ்ந்தோம்.

இவ்வாறான ஒரு சூழலில் நச்சு விதைகளை விதைத்து 10 வருடங்களுக்கு முன்னர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் பிரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டமையே தற்போது இப்படி வந்துள்ளது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன்னுமொரு சக்தி இன்று எமது நாட்டுக்குள் வர முயற்சிக்கின்றது.அவ்வாறு அந்த நாடு இங்கு தளமொன்றை அமைத்தால் முஸ்லிம்களை விட மோசமாக பாதிக்கப்படபோவது சிங்கள மக்கள்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த சூழ்நிலையில் அப்பட்டமான பொய்களைத் தெரிவித்து கண்டியில் தலதா மாளிகை முன் உண்ணாவிரதமிருந்தார்.அவர் உயிரோடிருப்பது முக்கியமல்ல.

எனவே முஸ்லிம் சமுகம் பயந்துகொண்டு இருந்தால் எமது உரிமையை பெறமுடியாது.அவ்வாறான ஒரு சமுகம் வருவதற்கு இடமளிக்க முடியாது என்கிறார்.

அவரின் பேச்சின் முழுமையான காணொளியை காண்க

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!