சஹ்ரான் மறைந்தாலும் மறையாத அவரது அடிப்படைவாத கொள்கைகள்! (இன்றைய காலைநேர செய்திகள்)

26shares

குண்டுத்தாக்குதல்களை நடத்திய அடிப்படைவாதிகள் அழிந்திருந்தாலும் அவர்களின் அடிப்படைவாதக் கொள்கை இன்றும் நாட்டிலிருந்து முழுமையாக துடைத்தெறியப்படவில்லை என அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

புனித இஸ்லாம் மதத்துக்கு அப்பாற் சென்று மனிதாபிமானமற்ற முறையில் செயற்படும் ஐ.எஸ். தீவிரவாதத்தை இல்லாதொழிக்க சர்வதேச நாடுகள் புதிய வழிமுறைகளையும், நடைமுறையில் பின்பற்றி வந்த சட்டங்களையும் மீள் பரிசீலனையும் செய்து காலத்துக்கு ஏற்றவாறு நாட்டை நிர்வகிக்கின்றன.

ஆனால் நாம் மாத்திரம் விடுதலைப் புலிகளை இல்லாதொழித்த அணுகுமுறையை தொடர்ந்து பின்பற்றுகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் அழிவடைந்திருந்தாலும் இன்றும் அவர்களின் நோக்கம் மக்களோடு மக்களாக பரவியுள்ளது.

இஸ்லாம் மார்க்கத்துக்கு அப்பாற் சென்று மனிதாபிமானத்துக்கு எதிராக செயற்படும் அடிப்படைவாதிகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆபத்தானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியுடன் மேலும் பல செய்திகளுடன் இன்றைய காலைநேர செய்திகள் காணொளியில்

இதையும் தவறாமல் படிங்க