பதவி விலகிய அமைச்சர்களின் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டனர் பதில் அமைச்சர்கள்!

  • Jesi
  • June 10, 2019
123shares

அண்மையில் பதவி விலகிய ரவூப் ஹக்கீம்,ரிசாட்பதியுதீன் மற்றும் கபீர் ஹாசிம் ஆகிய மூவர் பதவி வகித்த அமைச்சுக்களின் வெற்றிடத்துக்கு மூவர் இன்றையதினம் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கைத்தொழில், வர்த்தகம், மீளக்குடியமர்த்துதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி பதில் அமைச்சராக பிரதியமைச்சர் புத்திக பத்திரண பதவியேற்றுள்ளார்.

இராஜினாமா செய்த ரவூப் ஹக்கீமின் பொறுப்பில் இருந்த நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக லக்கி ஜயவர்தன பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

கபீர் ஹாஷிமின் பொறுப்பில் இருந்த அரச தொழில் முயற்சி, பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக அனோமா கமகே பதவியேற்றுள்ளார்.

இவ் அமைச்சர்கள் இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.

இதையும் தவறாமல் படிங்க