ஹிஸ்புல்லாஹ் எந்நேரமும் கைது செய்யப்படலாம்? சட்டப்படி காரணத்துடன் வெளியான தகவல்!

371shares

காத்தான்குடி பள்ளிவாசலில் அண்மையில் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட இனவாத கருத்துக்களின் அடிப்படையில் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டுத் தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துவரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. நாம் இலங்கையர் என்ற அடையாளத்துடன் இருத்தல் வேண்டும் என இன்று சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து முஸ்லிம் மக்கள் இலங்கையில் சிறுபான்மையினரே உள்ளனர். ஆனால் சர்வதேச ரீதியாக நாங்களே பெரும்பான்மையினர் என ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.

அத்துடன் தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்த ரத்ன தேரரைப் பார்க்க வந்த தேரர்கள் தொடர்பிலும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார் எனவும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்