மைத்திரிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்; கடும் ஆத்திரத்தில் எடுக்கப்போகும் முடிவு?

313shares

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டுள்ளது என தென்னிலங்கையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அவர் கடும் சினத்துடன் காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தெரிவுக்குழு உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த வேண்டுமென்ற ஜனாதிபதியின் கோரிக்கை ஜனாதிபதி தரப்பில் இருந்து தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவரினூடாக அறியக் கிடைத்ததாகவும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தொடர்பிலும் இப்போது ஆராயப்படுவதால் அவரை சந்திப்பது தார்மீகமானதல்லவென தீர்மானிக்கப்பட்டதாக குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

தெரிவுக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதி இவ்வாறு பேச்சுக்கு அழைத்திருக்கலாமென குறிப்பிட்ட அவர், ஏற்கனவே சபாநாயகர் இதுவிடயத்தில் ஒரு முடிவை எடுத்திருப்பதால் வேறு ஆட்களுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லையென்றும் குறிப்பிட்டர்.

இன்று தெரிவுக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதியின் இந்த கோரிக்கை குறித்து விரிவாக பேசப்பட்ட போதும் பெரும்பாலான உறுப்பினர்கள் அதனை நிராகரித்துவிட்டனர் என அறியமுடிகிறது.

எவ்வாறாயினும் தற்போதைய அரசியற் சூழ்நிலையில் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றம் சார்ந்து நடவடிக்கையினை எடுக்கலாம் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க