ஸ்ரீலங்கா நீதித்துறைக்கே அவமானம்! நீதிபதியை மாற்றி தீர்ப்பெழுத வைத்த ஹிஸ்புல்லாஹ் !!

553shares

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலை வர் தவராசா பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிசாட் பதியுதீன் ஆகியோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக் கள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதற்கமைய இந்தப் பிரிவிலேயே ஹிஸ்புல்லாவுக்கு எதிரான முறைப்பாட்டை தவராசா பதிவு செய்து ள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தவராசா தெரிவிக்கையில்

முகநூலில் காணப்படும் ஹிஸ்புல்லாவின் உரையின் காணொலியொன்றில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசா ரணை நடைபெற்றுக் கொண்டிருந்த ஓர் வழக்கு தொடர்பாக தான் நீதிபதியை மாற்றி தனக்கு சாதகமாக நீதிபதி யைக் கொண்டு வந்து எழுதடா தீர்ப்பு என்று எழுத வைத்ததாக அவ்வுரையில் இருக்கின்றது.

இது இலங்கையின் நீதித்துறையையே அதன் சுதந்திரத்தையும் அதன் கௌரவத்தையும் கேள்விக்குறியாக்கும் ஒரு விடயம். எனவே இது தொடர்பாக உடனடியாக விசாரித்து தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு ஹிஸ்புல்லா தனது அரசியல் பதவிகளை பாவித்து அல்லது துஷ்பிரயோகம் செய்து நீதித்துறை மீதும் சட்டம் ஒழுங்குத் துறை மீதும் வேறு ஏதாவது அழுத்தங்களை இதேபோல் பிரயோகித்திருக்கின்றாரா என்பதை ஆராயும் படியும் முறைப்பாட்டில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இதே போன்று எழுத்திலான முறைப்பாடு ஒன்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கும் இன்று என்னால் கையளிக்க ப்பட்டுள்ளது. மேலும் அவரின் உரையின் காணொலிப் பிரதிகள் பொலிஸ் தலைமைக் காரியாலயத்துக்கும் நீதிச் சேவைச் ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும் தவசராசா தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க