அண்ணன் வழியில் தம்பி!கொலையா? தற்கொலையா?

60shares

முல்லைத்தீவு செம்மலை கிழக்கு பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .

செம்மலை கிழக்கு பகுதியை சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞரே உடலமாகி மீட்கப்பட்டுள்ளார் .

வீட்டுக்கு அண்மையாக உள்ள களப்பு ஒன்றின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு குறித்த இளைஞரின் சடலம் இருப்பதை கண்ட சிறுவன் ஒருவர் உயிரிழந்த இளைஞரின் வீட்டாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக உடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளனர் .

குறித்த இளைஞரின் சகோதரன் ஒருவரும் கடந்த 2வருடங்களுக்கு முன்னர் இந்த இளைஞர் தூக்கு மாட்டி தொங்கி இறந்த மரத்திலேயே தூக்கில் தொங்கி இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

யாழில் தரக்குறைவாக பேசியவரை இழுத்துப் போட்டு உதைத்த பெண்! காலில் விழுந்து கதறிய நபர்

யாழில் தரக்குறைவாக பேசியவரை இழுத்துப் போட்டு உதைத்த பெண்! காலில் விழுந்து கதறிய நபர்