சிறிலங்காவில் பல்கலைக்கழகம் ஒன்றில் பாலியல் ரீதியாக பகிடிவதை! வெளிவந்த புதிய தகவல்

97shares

ருகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்காக அறை உள்ளதாகவும், புதிய மாணவர்கள் பாலியல் ரீதியாகவும் பகிடிவதை செய்யப்படுவது தொடர்பில் தான் கண்டுபிடித்துள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற ருகுணு பல்கலைகழகத்தின் ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தான் குறித்த இரும்புக் கதவுகளை உடைத்து உள்ளே சென்றதாகவும், அப்பகுதிக்குள் 15 வருடங்களாக எந்தவொரு பேராசிரியரோ அல்லது பாதுகாப்பு பிரிவினரோ சென்றதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு வருட காலத்திற்கு பகிடிவதை செய்வதாகவும் இதன்போது புதிய மாணவர்களை ஆர்ப்பாட்டங்களிற்கு அழைத்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் யாரும் ஆர்ப்பாட்டத்திற்கு செல்வதில்லை எனவும் புதிய மாணவர்கள் பலவந்தமாக இவ்வாறான செயற்பாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!