துண்டு துண்டாக வெட்டி மீன்களுக்கு இரையாக்கப்பட்ட இராணுவ தளபதி! கிம் ஜாங்கின் கொடூரம்

206shares

வடகொரியாவில் இராணுவ புரட்சி நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், வடகொரிய இராணுவ தளபதி ஒருவருக்கு மிகவும் கொடூரமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பியாங்யாங்கில் உள்ள தனது வீட்டில் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் அன் வைத்திருக்கும் பிரமாண்டமான பிரானா மீன் தொட்டியில் அந்த இராணுவ தளபதி தூக்கி வீசப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இராணுவ தளபதியின் கைகள் மற்றும் உடல் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட அவரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி உள்ளார் கிம் ஜாங் அன்.

தொட்டியில் இருந்த நூற்றுக்கணக்கான பிரானா மீன்கள், அவரது உடலை கடித்து குதறி சாப்பிட்டுள்ளன.

பிரானா மீன்கள் மிகவும் மூர்க்கமானவை. அவை இரும்பு போன்ற பற்களை கொண்டிருக்கும். அதன் மூலம் இரும்பு தகடுகளையே கடித்து தூள்தூளாக்கி விடும்.

மாமிச விரும்பிகளான பிரானா மீன்கள் தனது வலுவான பற்களை கொண்டு சில வினாடிகளிலேயே மனித உடலை அடையாளம் தெரியாமல் சிதைத்துவிடும்.

இந்த மரண தண்டனை குறித்த தகவலை தெரியப்படுத்தி உள்ள இங்கிலாந்து உளவுப்படையினர், ‘ஜேம்ஸ்பாண்டு’ படத்தின் பாணியில் கிம் ஜாங் இந்த மரண தண்டனையை நிறைவேற்றியதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க