தயாசிறி ஜயசேகரவின் எச்சரிக்கையால் விழிபிதுங்கும் அரச அதிகாரிகள்!

139shares

உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்வங்கள் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் அரச அதிகாரிகள் தண்டிக்கப்படுவர் என எச்சரிக்ககை விடுத்துள்ளார் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.

கொழும்பிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு எச்சரிக்கை விடுத்து ள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் மற்றும் அவர் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் தொடர்பில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபையில் 2015 ஆம் ஆண்டு முதல் ஆராயப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், அதன் அடிப்படையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கூடி வருகின்ற போதிலும், பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

“2015 ஆம் ஆண்டு முதல் சஹ்ரான் மற்றும் அவரது செயற்பாடுகள் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைமாறப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்டிருக்கின்றது. ஏன் அதன் அடிப்படையில் இந்த கும்பலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

2015 ஆம் ஆண்டு முதல் புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கும், பொலிசாருக்கும் பொறுப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களே இருந்தனர். பிரதமரும் அந்தக் கூட்டங்களில் அங்கம் வகித்திருந்தார். முஸ்லிம் அமைச்சர்களின் அழுத்தங்கள் காரணமாகவா அரசாங்கம் இவற்றுக்கு எதிராக செயற்படாது இருந்தது என்று நாம் வினவுகின்றோம்.

2015 ஆம் ஆண்டு முதல் சட்டம் – ஒழுங்கு அமைச்சை பொறுப்பு வகித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து ஜனாதிபதி அந்த அமைச்சை பொறுப்பேற்று நான்கு மாதங்களே ஆகின்ற நிலையில், ஏற்பட்டுள்ள அனைத்து குழப்பங்களுக்கும் அவரை குற்றவாளியாக்க ஐக்கிய தேசியக் கட்சி முற்படுகின்றது. அதனால் இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர,ஜனாதிபதி மீது பழியை சுமத்த இடமளிக்க முடியாது.

ஏனெனில் பல ஆண்டுகளாக இந்த செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை தொடர்பில் பறிமாறப்பட்ட ஆவணங்களை நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராய வேண்டும். இந்தக் குழு வெறுமனே சாட்சியங்களை விசாரிப்பதால் பலனில்லை. தேவையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு அவற்றை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். முடிந்தால் எழுத்துமூலம்

பறிமாறப்பட்ட ஆவணங்களை பெற்று விசாரிக்க வேண்டும். அதனால் இந்த விசாரணைகள் தொடர்பில் கட்சி என்ற ரீதியில் நாம் எமது கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம்”. இதேவேளை நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சென்று நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய இரகசியங்களை கூறிவரும் அரச படைகளினதும், புலனாய்வு பிரிவுகளினதும் தலைமை அதிகாரிகள் சட்டத்துக்கு அமைய தண்டிக்கப்படக்கூடிய ஆபத் தையும் எதிர்நோக்கியுள்ளதாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் எச்சரித்திருக்கின்றார்.

“அரச அதிகாரிகள் தொடர்பில் நடைமுறையில் இருக்கும் 1955 ஆம் ஆண்டு ரகசிய தகவல்களை பகிரங்கப் படுத்துவதற்கு எதிரான சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகும் அரச படைகள் மற்றும் புலனாய்வு கட்டமைப்புக்களின் அதிகாரிகள் தண்டிக்கப்படக்கூடிய ஆபத்தொன்றும் இருக்கின்றது. அதனால் இந்த நடவடிக்கைகள் காரணமாக அதிகாரிகளும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர்”.)

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் நற்பெயரைக் களங்கப்படுத்தி, அரசியல் ரீதியாக அவரை ஓரங்கட்டுவதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு எதிர்ப்பையும் மீறி விசாரணை களை முன்னெடுத்து வருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் குற்றம்சாட்டுகின்றார்.

இந்த தெரிவுக்குழுவுக்கு தற்போது எதிர்ப்பை வெளியிட்டுவரும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலை மையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவினரே இந்த நாடாளுமன்றத் தெரிவுக் குழு வை உருவாக் குவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்ததிற்கு துணை போயிருந்ததாகவும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செய லாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

“ஜனாதிபதியை இலக்கு வைத்துக்கொண்டே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக் கப்படுகின்றன. நாடாளு மன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் ஒரு விவகாரம் நீதிமன்றில் விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமானால் அதுகுறித்து மேலதிகமான ஆராய்வதற்கு நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய உரிமை இல்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை உச்ச நீதிமன்றில் ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக் கின்றன. நேற்றைய தினம் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்க மைய அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றில் அந்த விடயத்தை ஆராய முடியாது. ஆனால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த விவாகரத்தை ஆராய்வதுடன் புலனாய்வு பிரிவுகளின் தலைமை அதிகாரிகளை அழைத்து, ரகசியம் பேணப்பட வேண்டிய பல விடயங்களை பகிரங்கமாக கலந்துரையாடுகின்றது. அவை ஊடகங்கள் வாயிலாக அனைவருக்கும் பகிரங்கப்படுத்தப்பட்டும் வருகின்றன.

நேற்றைய தினம் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு படைப் புலனாய்வாளர்களை அழைப்பதால் நாட்டின் புலனாய்வுக் கட்டமைப்பிற்கும், பாதுகாப்பிற்கும் பாரிய நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக நாடாளு மன்றத்திற்கும், சபாநாயகருக்கும் ஜனாதிபதி தெரியப்படுத்தியிருந்தார். ஆனால் அதனையும் பொருட்படுத்தாது இந்தக் குழு கூடியுள்ளது. இதற்கமைய இந்தக் குழு உச்ச நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள மனுக்களில் பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினரையும் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதால், மனுதார ர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது. இதுகுறித்து சட்டமா அதிபர் சபாநாயகருக்கும், ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தியும் உள்ளார். அதனால் இந்த விடயத்தை நாடாளுமன்றமும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் ஆழமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதேவேளை 2015 ஆம் ஆண்டு ஜனவரி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை அடுத்து 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு வரை ஆட்சியில் இருந்த பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும், ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கியிருந்த தேசிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அங்கம் வகித்திருந்தார்.

இந்த நிலையிலேயே 2018 ஆம் ஆண்டு டிசெம்பர் 16 ஆம் திகதி மீண்டும் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும், ஜனாதிபதி மீது பழி சுமத்த முடியாது என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க