சலுகைகளை பெற முற்பட்டால் உரிமைகளை வென்றெடுக்க முடியாது!- முஸ்லிம் மக்களுக்கு அறிவுறுத்து!

44shares

இலங்கையில் ஆட்சியில் இருக்கும் சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து சலுகைகளை மாத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் இருப்பார்களாயின் ஒருபோதும் அவர்களால் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

இதனால் மொழியால் ஒன்றுபட்ட முஸ்லிம் சமூகம், தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என நாட்டில் தற்போது முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.பி.சி தமிழுக்கு கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியிருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில்வாழும் சிறுபான்மையினமான முஸ்லிம் சமுகம் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றது. இலங்கையின் வட மேல் மாகாணத்தின் பல இடங்களிலும், கம்ப ஹா மாவட்ட த்தின் மினுவங்கொட நகரிலும் வாழும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து கடந்த மே மாதம் 12 ஆம், 13 ஆம் திகதிகளில் சிங்கள இனவாதிகளால் இன வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.

இதனால் 10 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும், பல கோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம் மக்களின் சொத்துக் களும் அழிக்கப்பட்டதுடன், ஒரு உயிரும் பறிக்கப்பட்டது. இந்த இனவன்முறைகள் இன்றும் இலங்கையில் குறிப் பாக சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென் இலங்கையில் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன. இத னால் இன்னமும் முஸ்லிம் மக்கள் மற்றுமொரு இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுவிடுமோ என்ற அச்ச த்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த அச்சத்திலிருந்து மீண்டு, முஸ்லிம் சமுகம் அனைத்து உரித்துக்களையும் பெற்று சுதந்தி ரமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டுமானால், உரிமைக்காக போராடிவரும் தமிழ் சமுகத்துடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று தமிழர் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக அழைப்புக்கள் முன்வைக்கப் பட்டு வரு கின்றன.

தமிழ் மக்கள் கட்சியின் செயலாளர் நாயகமான வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னே ஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பகிரங்கமாகவே இந்தக் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிலுந்து வெளியேறி தனித்து செயற்படும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும் முஸ்லிம் சமுகத்துக்கு இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.

இதேவேளை அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களை இலக்கு வைத்துள்ள சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தை ஆட்சியிலுள்ள அரசாங்கங்களே ஊக்குவிப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிங்கள பௌத்த அடிப்படை வாதம் தற்போது மோசமான நிலையை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளஅவர் அதனை கட்டுப்படுத்தாவிடின் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க