அமைச்சுப்பதவி விவகாரத்தில் அழுங்குப்பிடியில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள்!

43shares

சிறிலங்கா அரசாங்கத்தில் வகித்த அமைச்சுப் பதவிகளை தற்போதைய சூழ்நிலையில் பொறுப்பேற்க முடியாது என்று அமைச்சுப் பதவிகளில் இருந்து கடந்தவாரம் விலகிக்கொண்ட முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவித் திருக்கின்றனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் அஸ்கிரி பீட மகாநாயக்கர் தலைவமையிலான பௌத்த பீடங்களின் தலைமை பிக்குகளை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரியப்படுத் தியுள்ளனர்.

அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்கர் வரக்காகொட சிறி புத்தரக்கித்த தேரர் தலைமையில் அஸ்கிரி – மல்வத்து பீடங்களின் துணை மகாநாயக்கர்கள் உள்ளிட்ட தலைமை பிக்குகள் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டிரு ந்தனர்.

இவர்கள் முன்னிலையில் தாங்கள் அரசாங்கத்தில் இருந்து பதவி விலகியதற்கான காரணத்தை தெளிவுபடுத்திய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் மக்கள் மீது மற்றுமொரு இன வன்முறை கட்ட விழ்த்துவிடப்படலாம் என்ற அச்சமும், அதனால்

நாடு மீண்டும் அதல பாதாளத்திற்குள் தள்ளப்பட்டுவிடும் என்பதற்காகவுமே தாங்கள் உடனடியாக பதவிகளை தியாகம் செய்யத் தீர்மானித்ததாக கூறினார்.

எனினும் பதவி விலகியது தொடர்பில் பௌத்த தலைமை பீடங்களான மகாநாயக்கர் உள்ளிட்ட தலைமை பிக்கு களின் அறிவுரைகளையும், ஆலோசணைகளையும் தாங்கள் ஒருபோதும் நிராகரிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்த ஹக்கீம், எனினும் தற்போதைய சூழ்நிலையில் தங்களால் பதவிகளை மீண்டும் ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் மக்கள் மீதும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீதும் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணையொன்று நடத்த ப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தங்களால் அமைச்சுப் பதவிகளை ஏற்க முடியாது என்றும், அவ்வாறு ஏற்பதும் மேலும் சிக்கலை மோசமாக்கவிடும் என்றும் ஹக்கீம் அச்சம் வெளியிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அஸ்கிரி பீட மகாநாயக்கர் உள்ளிட்ட பௌத்த தலைமை பீடங்களின் தலைமை பிக்குகள், தாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், பல நூற்றாண்டு காலமாகவே முஸ் லிம்களும் – சிங்கள மக்களும் ஒன்றாகவே வாழ்ந்து வந்திருப்பதாகவும்,வரலாற்றுக் கதைகளையும் குறிப் பிட்டனர்.

அதேவேளை குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள முஸ்லிம்தலைவர்கள் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதோடு, சிங்கள மக்கள் உட்பட ஏனைய சமுகத்தின் மத்தியில் முஸ்லிம்கள் தொடர் பில் எழுந்துள்ள சந்தேகங்களையும் முற்றாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் இந்த பிரச்சனையில் தற்போதைய ஆட்சியாளர்களான ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் மீது தமக்கு நம்பிக்கையில்லை என்றும் நேரடியாக தெரிவித்துக்கொண்டனர்.

இதையும் தவறாமல் படிங்க