அனைத்து அரசியல் நெருக்கடிக்கும் உடனடித் தீர்வைத் தெரிவிக்கும் மகிந்த தரப்பு!

39shares

ஸ்ரீலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்டஅனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமானால் உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொருளாதாரப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கடந்த 52 நாள் நீடித்த மைத்ரி – மஹிந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருந்திருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் இதுவரையான பிரச்சினைகள் எழுந்திராமல் புதிய அரசாங்கமும் அமைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“பிரபலமான எதிர்கட்சியால் ஜனவரி 05ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கான அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த வருடத்தில் பலமான அழுத்தங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைபெற்றிருந்தால் இந்தப் பிரச்சினைகள் எல்லாமே இருந்திருக்காது.அதற்காகவே மஹிந்த ராஜபக்ச மிகவும் தீர்க்கமான நிலையில் தனது கழுத்தை கொடுத்தார். இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்பட்டு

ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமரான மஹிந்த ராஜபக்ச பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் நேரடியாக ஆட்சியைக் கைப்பற்ற செல்லவில்லை. மாறாக தேர்தலுக்கே செல்லவிருந்தோம். கடந்த ஜனவரி 05ஆம் திகதி ஜனநாயக ரீதியில் தெரிவுகளை செய்வதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்க முன்வந்திருந்தோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான பொறுப்புக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தவர்களே ஏற்க வேண்டும். அதற்காகவே நாங்கள் தேர்தலுக்கான சந்தர்ப் பத்தை வழங்க வலியுறுத்துகிறோம். கடந்த ஆண்டில் உடனடியாக ஜே.வி.பியினரால் கடிதமொன்று அவசர அவசர மாக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. உடனடியாக அது கலந்துரையாடப்படாமலும் ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படாமலும் விவாதத்திற்கு எடுக்கப்படாமலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டு சபா நாயகரினால் குரல்மூலம் அறிவிப்பும் விடுக்கப்பட்டது.

அவ்வாறு அன்று இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் இன்று வரையிலான பிரச்சினைகளும் எழுந்திருக்காது” என்றார்.

இதேவேளை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அரசியல் யாப்பு தொடர்பான நிபுணரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாட்டில் நிலவும் அனைத்து நெருக்கடி களுக்கும் தீர்வுகாண்பதற்காக உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

‘ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். அனைத்து தேர்தல்களையும் இடைநிறுத்தி இந்த அரசாங்கம் சர்வ தேச ரீதியில் சாதனை படைத்துள்ளது. மாகாண சபைகள் தேர்தல்கள் இன்று இல்லை.09 மாகாண சபைக ளிலும் 08 சபைகள் ஸ்தம்பிதடைந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலையும் தற்போது காலம் தாழ்த்த இடமளிக்கமாட்டோம். சரியான நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னதாக அரசியலமைப்பின்படி வேட்புமனு கோரப்படுவது அவசியம். நவம்பர் 15 தொடக்கம் டிசம்பர் 09ஆம் திகதிக்கு இடையில் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அரசியலமைப்பு திருத்தம் செய்வதற்கு தயாராக வேண்டும். நாட்டில் இன்று இரண்டு பிரச்சினைகள் உள்ளன.

நாட்டுப் பாதுகாப்பு வீழ்ச்சிகண்டுள்ளது. முப்படையினர், பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு முரணான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஜனாதிபதியின் உத்தரவும் நாடாளுமன்றத்தின் உத்தரவும் ஒன்றன்பின் முரணாக உள்ளது.

இதனிடையே ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் குறித்து சிலரது தொலைபேசி அழைப்புக்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவது அவசியம் என்றாலும் விசாரணைகள் நடத்தப்படுவதில்லை. அரசாங்கத்திற்குள் உட்பூசல் கள் உக்கிரமடைந்துள்ள காரணத்தினால் உடனடி தீர்மானம் எடுக்க வேண்டும்”என்றார்.

இதையும் தவறாமல் படிங்க