ஸ்ரீலங்காவுக்கு தனது விசேட பிரதிநிதியை அனுப்புகிறார் ஜப்பான் பிரதமர்!

32shares

ஸ்ரீலங்காவுக்கு தனது விசேட பிரதிநிதி ஒருவரை அனுப்புகிறார் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே.

இதன்படி ஸ்ரீலங்காவுக்கு வருகைதரும் ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதி கலாநிதி ஹிருட்டோ இசுமி, பிரதமர் ரணிலி விக்கிரம சிங்கவுடன் எதிர்வரும் 20 - 22 ஆம் திகதிக்குள் சந்திப்பை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்டுகிறது.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னரான காலத்தில் ஜப்பான் விடுத்துள்ள பயண எச்சரிக்கையை நீக்குவது தொடர்பில் பிரதமர் பேசுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைப்பு மற்றும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தில் (ECT) இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுடனான கூட்டு ஒப்பந்தம் ஆகியவற்றையும் விவாதிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க