பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்றுமுதல் ஏற்படப்போகும் மாற்றம்!

622shares

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கடந்த உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் கடைப்பிடிக்கப்பட்டுவந்த இறுக்கமான நடைமுறையில் இன்றுமுதல் சற்று தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதிவரை பயணியுடன் இரண்டு விருந்தினர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட போக்குவரத்து விமானசேவைகள் அமைச்சின் ஊடகச்செயலாளர் தமீரா மஞ்சு,

பயணி ஒருவருடன் இரண்டு விருந்தினர்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிக்குள் செல்வதற்கு இன்றுமுதல் அனுமதிக்கப்படுவர் .ஆனால் பாதுகாப்பு நடைமுறைகள் முன்னரைப்போன்றே தொடரும் என்றார்.

இதேவேளை விமானப்படைப் பேச்சாளர் கிகான் செனவிரத்ன தெரிவிக்கையில் பயணி ஒருவர் வரும்போதோ அல்லது பயணி ஒருவர் செல்லும் போதோ இரண்டு விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவர் என்றார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலை அடுத்து விமானநிலையத்தின் அனுமதிக்கப்பட்ட பகுதிக்குள் பயணியைத்தவிர வேறு எவரும் இதுநாள்வரை அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

இதையும் தவறாமல் படிங்க