ஜனாதிபதி பதவி விலகுவதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும்!

13shares

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலகுவதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்த சிறிலங்கா ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஏமாற்றிவிட்டதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வவுனியாவில் தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்து இதுவரையும் தமது பிள்ளைகளை மீட்டு தரவில்லை என தெரிவித்தே இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது வவுனியா சகாயமாதபுர மாதா கோவிலில் தமது பிள்ளைகளை வேண்டி பிரார்தனைகளில் காணாமல் போன உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அதன் பின்னர் அங்கிருந்து பேரணியாக கந்தசுவாமி கோவில் வீதியூடாக 843வது நாளாக காணாமல் போன உறவினர்களால் சுழற்சிமுறை உண்ணாவிரதத்தில் இடம்பெறும் கொட்டகையை வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அமெரிக்க ஐரோப்பிய கொடிகளை தாங்கியிருந்ததுடன் ஜனாதிபதியே நாங்கள் உங்களை வரவேற்கவில்லை நீங்கள் உங்கள் இடத்திற்கு திரும்பி போங்கள், சிறிசேனவே நீங்கள் ஜனாதிபதி பதவியை விட்டு விடுவதற்கு முன் எங்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை காட்டுங்கள் போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி