கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்! உறுதிப்படுத்தினார் பசில்

74shares

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவே பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிற க்கப்படுவாரென சூசகமாக தெரிவித்துள்ளார் அந்தக்கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச.

அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் , கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று தேர்தல் ஆணையகத்தில் இடம் பெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனவே மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்படும்.

பொதுஜன பெரமுனவின் சார்பிலே ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை.

இந்தவருடம் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க