மன்னாரில் 12 மாதிரி கிராம வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

24shares
Image

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரி கிராம வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னாரில் வைபவ ரீதியாக இடம் பெற்றது.

மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட மன்னார் தொடக்கம் தலை மன்னார் வரையில் சுமார் 12 மாதிரி கிராம வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

12 மாதிரிக் கிராமங்களில் 322 வீடுகளுக்கான அடிக்கல் வைபவ ரீதியாக நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் செல்வராஜ் குலாஸ் தலைமயில் இடம் பெற்ற நிகழ்வுகளில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.முஜாகீர் மற்றும் உறுப்பினர்கள் , தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க