குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் எதிராக இதுவரை 11 முறைப்பாடுகளாம்!

  • Shan
  • June 12, 2019
41shares

பதவியை இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யும் நாள் இன்றைய தினத்துடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே மேற்படி தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி குறித்த முறைப்பாடுகளில் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 7 முறைப்பாடுகளும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளதுடன் அசாத் சாலிக்கு எதிராக மூன்று முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக அந்த தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று இறுதித் தினமாக இருப்பதால் இன்றைய நாளிலும் முறைப்பாடுகள் பதியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று அனைத்தும் இறுதியிடப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க