ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தில் நிலவிய பதற்றம்; உயிர் இருக்கும்வரை விடமாட்டோம் என முழக்கம்!

  • Shan
  • June 12, 2019
1059shares

தனது உயிர் இருக்கும்வரை ஸ்ரீலங்கா நாட்டை இஸ்லாமிய தேசமாக மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு அரேபிய தனியார் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த ரத்ன தேரர் இந்தப் பல்கலைக்கழகத்திற்காக செலவிடப்பட்ட பணம் உட்பட இதுகுறித்த முழுமையான விசாரணை அவசியம் என்பதையும் மீண்டும் வலியுறுத்தினார்.

மட்டக்களப்பு அரேபியப் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற ரத்ன தேரரின் குழுவினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே சற்று முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக்குரிய அரேபியப் பல்கலைக்கழகத்தினைப் பார்வையிடுவதற்காக அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்த சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர் நேற்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ரத்ன தேரரின் இந்த விஜயத்தில் பிக்குமார்கள் சிலரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் பிரியந்த பத்திரண என்பவரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவும் பல்கலைக்கழக வளாகத்திலும் நூற்றுக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஆயுதம் தரித்த ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்தப் பல்கலைக்கழகத்திற்குள் செல்வதற்காக ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் முன்வைத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா இராணுவத்தின் உயரதிகாரிகள் நிராகரித்தனர். இந்த அறிவிப்பை மீறி கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் பிரியந்த பத்திரண நுழைய முயற்சித்தபோது அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

இறுதியில் ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு குறித்த தனியார் பல்கலைக்கழகத்திற்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஊடகங்களுக்கு உட்செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

பல்கலைக்கழகத்திற்குள் சென்று பார்வையிட்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அத்துரலியே ரத்ன தேரர், தனது உயிர் இருக்கும்வரை ஸ்ரீலங்கா நாட்டை இஸ்லாமிய தேசமாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது என்று கூறினார்.

"மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் தனிப்பட்ட சொத்தாக கருதப்படும் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் நிற்கின்றோம். எமது உயிர் இருக்கும்வரை ஸ்ரீலங்கா பூமியில் நாட்டின் அடையாளத்தை அழிக்கின்ற மற்றும் எமக்குத் தெரியாதவற்றை செய்வதற்கு இடமளிக்கமாட்டோம். ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்தால் அதனை பார்வையிடுவதற்கான ஆராய்வதற்கான உரிமை எமக்கு உள்ளது. இந்த ஹிஸ்புல்லா தனியார் பல்கலைக்கழகம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடைசெய்யப்பட்ட வலயமல்ல. இராணுவத்தின் பலர் இந்தப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தனிப்பட்ட ஒருவரது நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கான இராணுவப் படையினரை ஈடுபடுத்தி பாதுகாப்பு செய்வதற்கு அவசியமில்லை. எனவே இந்த பல்கலைக்கழக்கழகத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் கையகப்படுத்தி இராணுவத்தினரின் விஞ்ஞானபீடமாக மாற்ற வேண்டும்.

கிழக்குப் பகுதிக்கு ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு இதுவரை இல்லாத விஞ்ஞான ரீதியிலான மற்றும் செய்மதி தொழில்நுட்பம், கணனி தொழில்நுட்பத்திறன் கற்றுக்கொடுக்கின்ற மத்திய நிலையமாக இதனை மாற்றும்படி அறிவிக்கின்றோம். அதேபோல இந்த நாட்டில் எந்த நிறுவனத்தினால் இதற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது? அந்தப் பணம் எவ்வாறு விரயம் செய்யப்பட்டுள்ளது அல்லது யாரிடம் வழங்கப்பட்டது? தீவிரவாதிகளின் கைகளிலா அல்லது திருடப்பட்ட தனிநபர் கணக்குகளிலா வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முறையான விசாரணை ஒன்று அவசியம். மேலும் எமது உயிர் இருக்கும்வரை ஸ்ரீலங்கா நாட்டை இஸ்லாமிய தேசமாக மாற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம். எமது பரம்பரை மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு எமது நாட்டு உரிமைகளை பாதுகாத்து வழங்குவோம்" என்றார் தேரர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்