இன்று பொலிஸாரின் வலையில் சிக்கிய சட்டவிரோத அமைப்பின் குருநாகல் பொறுப்பாளர்!

39shares

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் குருநாகல் பொறுப்பாளராக செயற்பட்டார் என சந்தேகிக்கும் ஒருவர் விசேட பொலிஸ் பிரிவால் குருநாகல் நாரம்மலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரம்மல கட்டுப்பொத்தையில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு செயற்பட்டது என அந்த அமைப்பு உரிமை கோரியிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் பரந்துபட்டு மறைமுகமாக செயற்பட்டுவந்தவர்கள் இலங்கை பொலிஸார் மற்றும் முப்படையினர் மட்டுமன்றி சர்வதேச ரீதியாக செயற்பட்டுவந்த புலனாய்வுத் துறையினரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தொழிற்சாலைகள் என்ற பெயரில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட தொழிற்சாலைகளும் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கு பணிபுரிந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இலஙடகையர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து தொடர் தேடுதல் நடவடிக்கையின்போது நாடு முழுவதும் பரவலாக ஆயுதங்களும் வெடிபொருட்களும் உருமறைப்பு ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே இன்றைய தினமும் சஹ்ரானின் சகா ஒருவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்