வவுனியாவில் தந்தையுடன் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள்; பின்னர் நடந்த கொடுமை!

289shares

வவுனியா எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களின் செயற்பாட்டினை தட்டிக்கேட்ட குறித்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது அண்ணணின் நண்பன் மீதும் குறித்த இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லப்பர்மருதங்குளம் 8ம் ஒழுங்கையில் குறித்த பெண் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு அவரது தந்தையுடன் அயலில் உள்ள பூப்புனித நீராட்டு விழா கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார். அதன் போது அவ்வீதியில் நின்ற இளைஞர்கள் குறித்த பெண்ணை கிண்டல் செய்ததுடன் கையை பிடிக்கவும் முயன்றுள்ளனர்.

இதன் போது குறித்த பெண்ணின் தந்தை அவ் இளைஞர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட சமயத்தில் அவ் இளைஞர்களில் ஒருவர் பெண்ணின் தந்தையின் தலையில் கட்டையினால் தாக்கியுள்ளார். அதையடுத்து அருகில் நின்ற மற்றைய இளைஞர்களும் அவர்கள் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் பெண்ணின் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பெண் வீட்டிற்கு சென்று அவரது அண்ணனின் நண்பனை அழைத்துள்ளார். பெண்ணின் தந்தையினை காப்பாற்ற வந்த இளைஞன் மீதும் அவ் இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்தில் அயலவர்கள் ஒன்று கூடியதையடுத்து தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அவ்விடத்தினை விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் அண்ணனின் நண்பன் ஆகியோர் அயலவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சுயநினைவினை இழந்த நிலையில் பெண்ணின் தந்தை அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக சம்பவம் இடம் பெற்ற அன்றைய தினமே வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் தகவல்கள் அனைத்தும் பொலிஸாருக்கு வழங்கிய நிலையிலும் நான்கு நாட்கள் கடந்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்றைய தினம் பொலிஸாரின் தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் அண்ணனின் நண்பன் மீது தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரை அக்கிராம இளைஞர்கள் சூட்சுமமான முறையில் ஓர் இடத்திற்கு வரவழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அவ்விடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் அவ் இளைஞனை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவரது உதவிடன் மேலும் ஓர் இளைஞனையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவ் இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்