சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

  • Shan
  • June 12, 2019
403shares

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு ஸ்ரீலங்கா உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை மூலம் நீதிமன்றத்தை அவமதித்தார் என ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்ணாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜய ராஜரத்ன, இந்த விடயத்தில் மன்னிப்பு கோருவதற்கு தனது தரப்பு தயாராக உள்ளதாக பிரதிவாதி சட்டத்தரணி கடந்த வழக்கு விசாரணையின் போது தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னரே அவ்வாறான மன்னிப்பை பிரதிவாதி கோரலாம் எனவும் மேலதிக சொலிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இந்த விடயத்தை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாமும் ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில் தமது தரப்பான ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என பிரதிவாதி தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சைபர் முஸ்தபா குறிப்பிட்டார்.

எனினும் இந்த வழக்கில் தமது தரப்பு வாதங்களை முன்வைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்