அமைச்சுக்களை பொறுப்பேற்க வேண்டுமானால் இதற்கு உடன்படுங்கள்! நிபந்தனை விதித்த முஸ்லிம் அமைச்சர்கள்! அரசியல் பார்வை

259shares

அமைச்சு பதவிகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விரைவில் விசாரித்து, நிரபராதிகள் என அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு அறிவித்தால் பதவி விலகிய அமைச்சுப் பதவியை மீண்டும் பொறுப்பேற்க முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

தங்கள் குழுவினர் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பிரநிதிகள் நேற்று மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்த பின்னர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க