கிழக்கில் மீண்டுமொரு மர்மக் கொலை; வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

539shares

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நண்பகல் முதல் மர்மமான முறையில் மாயமாகிய பெண் வீட்டின் பின்புறத்தில் குளியல் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டடுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

திருக்கோவில் விநாயகபுரம் 02 பாடசாலை பிரதான வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் குறித்த பெண் தனது மகளின் குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார். திங்கட்கிழமை காலை குறித்த பெண் அயல் வீட்டுக்கு 11.30 மணியளவில் சென்ற வேளை தனது வீட்டில் நாய் குரைப்பதைக் கேட்டு வீட்டைப் பார்ப்பதற்காக தனது வீட்டுக்கு சென்றததாக அயல் வீட்டார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வயல் வேலை முடித்து 12.00 மணியளவில் வீடு திரும்பிய பெண்ணின் கணவரான சண்முகநாதன் கிருபைராசா என்பவர் குழந்தை தனியாக அழுது கொண்டு இருப்பதைப் கண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு அயல் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மனைவியை தேடியுள்ளார்.

ஆனால் எங்கு தேடியும் மனைவி கிடைக்கவில்லை. இந்நிலையில் திருக்கோவில் பொலிசாருக்கு கணவரால் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கோவில் பொலிசார் மற்றும் உளவுத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பொலிசாரும், குடும்பத்தினரும் காணாமல் போனதாக கூறிய பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜெயவீர தலைமையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை வீட்டின் பின்புறமாக கட்டப்பட்டிருந்த குளியல் அறையில் புதைக்கப்பட்ட நிலையில் சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதியும், மாவட்ட நீதவான் நீதிபதியுமான பி.சிவகுமாரின் பிரசன்னத்துடன் குறித்த பெண்ணின் சடலம் பொலிசாரினால் தோண்டி எடுக்கப்பட்டதுடன் சடலத்தின் முகத்தில் இரத்த கசிவுகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து குற்றத் தடயவியல் பொலிஸ் உத்தியோகத்தர்களால் தடயங்கள் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் திருக்கோவில் பொலிசார் இச்சம்வம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பெண்ணின் கொலை தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜெயவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு சலலமாக மீட்கப்பவர் திருக்கோவில் விநாயகபுரம்-02 பாடசாலை வீதியைச் சேர்ந்த திருமதி கிருபைராஜா கனகம்மா வயது 53 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மர்மமான முறையில் கடந்த சில வருடங்களாக பலர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்