மைத்திரியின் தான்தோன்றித்தனத்தால் ஏற்படப்போகும் பயங்கரம்?

416shares

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஆரம்பித்துள்ள தான்தோன்றித்தனமான செயற்பாடுக ளால் ஒக்டோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்பால் ஏற்பட்ட பின்னடைவை விடவும் மிகப்பெரிய பயங்கரம் நாட்டுக்கு ஏற்ப டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை தடை செய்வதற்காகவே அமைச்சரவை கூட்டத்தை நடத்தாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிடிவாதம் பிடிப்பதாகவும் அமைச்சர் சம்பிக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் தீர்வுகண்டு அடுத்த வார அமைச்சர வைக் கூட்டத்தை கூட்டுமாறும் சிறிலங்கா அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான அமைச்சர் சம்பிக்க ரணவக்க சிறிலங்கா ஜனாதிபதியை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஜாதிக ஹெல உறுமயவின் தலை வர் சம்பிக்க ரணவக்க, தனது கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இணைந்து இன்றைய தினம் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, அரசியல் நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வைக்கண்டு அடுத்தவாரம் அமை ச்சரவைக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று வலியுறுத்தினார்.

‘ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றம் - அரசாங்கம் மற்றும் அரசியலமைப்பு மோதலுக்கும், சட்டம் மற்றும் அரசியல் மோதலுக்கும் தயாராகி வருகின்றார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாக தேசிய பாதுகாப் புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் அதனால் தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்திற்கமைய இப்போது அமைச்சரவையைக் கூட்டுவதையும் தவிர்த்துக் கொண்டுள்ளார். அமைச்சரவையை கூட்டாமல் நாட்டின் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதமடைய செய்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொறுப்பில்லாமல் செயற்படுகின்றார். நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள், நாடாளுமன்ற அதிகாரம், நீதிமன்ற அதிகாரம் என்பவற்றை எமது அரசியலமைப்பில் மிகவும் தெளிவாக வெவ்வேறாக கூறியிருக்கிறது.

அண்மைய 52 நாள் ஜனநாயக புரட்சிக்காலத்தில் நீதிமன்றின் தீர்ப்பின்படி 19 ஆவது திருத்தத்திற்கமைய ஜனாதி பதியின் அதிகாரங்கள் அவற்றின் வரையறை, நாடாளு மன்றத்தின் அதிகாரங்கள் என்ன, அவற்றின் வரையறை என்பன தெளிவாக கூறப்பட்டது. அமைச்சரவையின் பிரதானி, நிறைவேற்றுத் தலைவர், ஜனாதிபதி நாடாளு மன்றத்திற்கு பொறுப்புக் கூறுவதற்கு உரித்துடையவர். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்காக 52 அமைச் சரவைப் பத்திரங்கள் இருந்தன. புதிய 19 பத்திரங்கள் உட்பட 70 பத்திரங்கள் உள்ளன. இன்னும் பல யோசனை களாக 32 உள்ளன. இவற்றை அனுமதிக்காமல் அரச பொறிமுறையை பலவீனப்படுத்தியதன் ஊடாக ஜனாதிபதி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். மறுபுறத்தில் அரசியல் ஆணையை வழங்கிய மக்கள் கடந்த ஆட்சியை விடவும் ஜனநாயக வழிமுறைகளையே எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கும்,அவர்களுடைய மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகள் அசியலமைப்பை மீறும் செயல். நாடாளுமன்றத்துக்கு சவாலை ஏற்படு த்திய சந்தர்ப்பம். எனவே இந்த நெருக்கடி தொடர்ந்தால் பயங்கரமான பாதிப்புக்கள் ஏற்படலாம். ஒக்டோபர் 26ஆம் திகதி செய்த பிழையினால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய அடி விழுந்தது. பாதுகாப்புச் சபை சரியான முறையில் நடத்தாமையினால் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டதுடன்,எமது சமூகம் விலைமதிக்க முடியாத இழப்பை எதிர்நோக்கியது. ஜனாதிபதி தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக அதேபோன்றதொரு அழிவுக்கு அழைப்பு விடுக்கின்றார். போர் இடம்பெற்ற போதும், நாடாளுமன்றத்துக்கு போகும் வழியில் தாக்குதல்கள் இடம்பெற்ற போதும், நாடாளுமன்றத்துக்குள் குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்ட போதும், அமைச்சரவை கூட்டங்கள் இடைநிறுத்தப்படவில்லை.

நாடாளுமன்ற அமர்வுகளும் நிறுத்தப்படவில்லை. இவை இல்லாத நிலையில் அரசியலமைப்புக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுவதால் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். எனவே இந்த வாரத்துக்குள் அனைத்து தரப்பும் பேச்சு நடத்தி அடுத்த வாரம் அமைச்சரவையை கூட்ட வேண்டும். அனைத்து தரப்பினரும் இந்த ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாட்டை கண்டிக்க வேண்டும். மீண்டும் அரசியலமைப்பினை மீறி செயற்படவேண்டாமென நான் ஜனாதிபதியிடம் கேட்கிறேன். மீண்டுமொரு ஒக்டோபர் 26 சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிட வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய