வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் அதிஷ்டம்!

843shares

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கும் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைக ளுக்கு தோற்றுவதற்கு தூதரகங்களின் ஊடாக வழிகளை செய்யும் செயல்முறையொன்றை முன்னெடுக்குமாறு பரீட்சை திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் நவீனமயப்படுத்தலுக்காக 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் பரீந்துரையின் பிரகாரம் பரீட்சை திணைக்களத்தின் நவீனமயப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இணையளத்தளம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களை இணையத்தளத்தின் ஊடாக வழங் குவதனை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்:

பரீட்சைகள் திணைக்களம் நம்பிக்கைக்கு பாத்திரமான நிறுவனமாக இயங்க வேண்டும். அதற்காக பல்வேறு செயல்முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.அத்துடன் பல்வேறு பிரத்தியேக தலையீடுகளை முடிந்தளவில் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நான் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று நான்கு வருடங்களில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களை கல்வித் துறையில் முன்னெடுத்துள்ளேன். அச்சமின்றி தீர்மானங்கள் பல எடுத்த போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து இடையூறுகளையும் விமர்சனங்களையும் சந்தித்தேன்.

டெப் கணனி வழங்கும் திட்டம் மாத்திரமே முன்னெடுக்க முடியாமல் போனது. எனினும் எப்படியாவது மாணவர்க ளுக்கு டெப் கணனி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன்.

கல்வியை அடிப்படையாக கொண்டே எதிர்காலம் அமையப் போகின்றது. இந்நிலையில் புதிய பிரவேசங்களை இனங்கண்டு எல்லைகளை கடந்து செயற்பட்டால் எம்மால் பல மாற்றங்களை செய்ய முடியும்.

இதன்படி பரீட்சை சான்றிதழ்களை இணையளத்தளத்தின் ஊடாக வழங்கும் முறைமை புதிய வேலைத்திட்ட மாகும் என அவர் இதன் போது தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்