முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு நாளை பதிலடி!

276shares

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறிய விடயங்கள் தொடர்பாக நாளையதினம் பதில் வழங்கப்படுமென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

நாளை மாலை 5 மணிக்கு நான் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கவுள்ளேன். அப்போது எல்லாவற் றையும் விளக்கிக் கூறுவேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஹிஸ்புல்லாவுக்கும் தற்கொலைதாரி சஹ்ரானுக்கும் இடையிலான தொடர்பு குறித்து வெளிப்படுத்தி யிருந்தார்.இதன்போது கிழக்கு மாகாணத்தில் சஹ்ரானின் அடாவடிகள் தொர்பிலும் தெரிவித்தார்.

இந்தநிலையில் நாளையதினம் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ள ஹிஸ்புல்லாஹ்,அசாத் சாலி தெரி வித்த கருத்துக்களுக்கு பதில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால் தெரிவுக்குழு அமர்வு பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும்.

அதன்படி இன்று (12) மாலை 3 மணி வரை 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.

இன்று பதிவு செய்யப்பட்ட 21 முறைப்பாடுகளில் 11 முறைப்பாடுகள் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று வரை 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் நாளைய தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு உறுப்பினரும் முன்னாள் பொலிஸ்மா அதிபருமான என்.கே.இலங்ககோனும் சாட்சிய மளிக்கவுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?