திடீர் பொதுத்தேர்தல் -ரணில் -மகிந்த முக்கிய பேச்சு!

98shares

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்படுத்தும் வகையில் பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்வது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச இடையே பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையை பகிஸ்கரிக்கும் முடிவை எடுத்துள்ள நிலையில் இந்தப் பேச்சு இடம்பெற்றுள்ளதாகவும் இருவரும் இது தொடர்பில் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் பொதுத்தேர்தல் உன்றுக்கு செல்வதாக இருந்தால் பருண ஆதரவை வழங்கத் தயார் என மகிந்த உத்தரவாதமளித்துள்ளார்

19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி நான்கரை ஆண்டுகள் செல்வதற்கு முன்னர் கலைக்கு முடியாதென்பதும் நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து அது வெற்றிபெற்றால் கலைக் கலாம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பொதுத்தேர்தல் ஒன்று முன்கூட்டியே நடத்தப்படுவதற்கு தமது எதிர்ப்பை தெரிவப்பதாக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற பின்வரிசை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உடனடி பொதுத்தேர்தல் சாத்தியமில்லை என ஐ.தே.க பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள அதேவேளை முதலில் ஜனாதிதித் தேர்தலே நடத்தப்படுமென எதிர்க்கட்சி பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி