கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆராதனை ஆரம்பம்!

34shares

ஐ.எஸ் தாக்குதல்களால் சேதமடைந்த கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் புனர் நிர்மா ணம்செய்யப்பட்ட நிலையில் முதலாவது ஆராதனை இன்று இடம்பெற்றுள்ளது.

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற முதலாவது ஆராதனையில் தற்கொலைத் தாக்குதல்களில் காயமடைந்த வர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவுகொண்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த தேவால யத்திற்குள் இடம்பெற்ற தாக்குதலில் தேவாலயமும் முழுமையாக சேதமடைந்திருந்தது.எனினும் தேவாலயத்தை புனர்நிர்மாணம் செய்யும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் கடற்படையினரிடம் ஒப்படைத்திருந்தது.

இதற்கமைய சிறிலங்கா கடற்படையினர் ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் மிக துரிதமாக கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தை புணர்நிர்மாணப் பணிகளை செய்துமுடித்த நிலையிலேயே இந்த ஆராதனைகள் மீண்டும் ஆரம்பி த்திருக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்