கோட்டாபய -சஹ்ரான் உறவு -மற்றுமொரு இரகசியத்தை அம்பலப்படுத்தினார் அசாத் சாலி

369shares

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் தவறான செயற்பாடுகள் குறித்து பேசிய காரணத்தினால் தான் நான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டுமல்ல, அவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர். 500 மில்லியன் ரூபா பணம் தருவதாக பேரம் பேசினர் என நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் நேற்று போட்டுடைத்தார் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 1995 இல் இருந்து இன்று வரையிருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும். இந்த அடிப்படைவாதத்தை பற்றி 2000ம் ஆண்டிலிருந்து தெரிவித்து வருகிறேன். அப்போதிருந்தே 5 பாதுகாப்பு செயலர்கள் இருந்தனர். அவர்களுக்கு உரிய காரணிகளை வழங்கினேன். எவரும் கருத்தில் கொள்ளவில்லை. பொலிசில் பல முறைப்பாடுகளை நாம் செய்தோம். முன்னைய ஆட்சியாளர் காலத்தில் காத்தான்குடியில் ஐ.எஸ் அமைப்பு பலமாக செயற்படுகிறது என கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் தெரிவித்தேன்.

ஆனால் கோட்டாபய ராஜபக்சவுக்கும், தௌஹீத் ஜமா அத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பிருந்தது. தௌஹீத்தை பற்றி பேசியதால்தான் நான் கைது செய்யப்பட்டேன். அது மட்டுமல்ல அவர்கள் குறிதது வாய் திறக்க வேண்டாமென எனக்கு அறிவுறுத்தினர். 500 மில்லியன் பணம் தருவதாக பேரம் பேசினர். தேர்தலில் களமிறங்குவதாக இருந்தால் அதில் 200 மில்லியனை செலவழிக்கவும் ஆலோசனை சொன்னார்கள்.

கடந்த காலங்களில் காத்தான்குடியில் நடந்த பல அசம்பாவிதங்களுக்கு சஹ்ரான் காரணமாக இருந்தார். இது குறித்து முஸ்லிம் மக்கள் முறைப்பாடுகள் செய்தபோதும், பொலிசார் சஹ்ரான் பக்கமே நின்றனர். சஹ்ரானை கைதுசெய்ய கிழக்கில் ஆர்ப்பாட்டம் கூட நடத்தினார்கள். தௌஹீத்தும், பொலிசாரும் ஒன்றாகவே செயற்பட்டனர் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!