முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் பின்னால் அரசியல்வாதிகள்: அமெரிக்காவிடம் முறையிட்ட மனோ

56shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தீவிரமடைந்துள்ள வெறுப்புணர்வுக்கு அரசியல்வாதிகளே காரணம் என்று தேசிய நல்லிணக்க மற்றும் சகவாழ்வுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

இந்த உண்மைய நேற்றைய தினம் அவரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸிடமும் கூறியதாக தெரிவித்திருக்கம் அமைச்சர் மனோ கணேசன், இந்த விடயத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்கத் தூதுவர், ஸ்ரீலங் காவின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் உதவுவதற்கு அமெரிக்கா தாயராக இருப்பதாகவும் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னரான நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் சகவாழ்வு விடயங்கள் தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடினர்.

இதன் பின்னர் இந்த சந்திப்பின் போது முக்கியமாக ஆராயப்பட்ட விடயங்களை அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஸ்ரீலங்க அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கத் தூதுவர் தெரி வித்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்காவில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருந்தாலும், சர்வதேச ரீதியில் பெரும்பான்மையினர் எனவும், இத னால் யாருடையவும் அச்சுறுத்தல்களுக்கு முஸ்லிம்கள் கீழ்படிய மாட்டார்கள் எனவும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கடந்த வாரம் சூளுரைத்திருந்தார்.

ஹிஸ்புல்லாஹ்வின் இந்தக் கூற்றுக்களினால் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை என தெரிவிக் கும் அமைச்சர் மனோ கணேசன், அப்பாவி முஸ்லிம் மக்களே இவ்வாறான கூற்றுக்களினால் பாதிப்பு களை எதிர்நோக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி