வெளிச்சத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க கட்டமைத்த அரசியல் நாடகம்

127shares

சிறிலங்கா அரசாங்கத்தில் வகித்த அமைச்சுப் பதவிகளில் இருந்து முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகிய விடயமானது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கட்டமைக்கப்பட்ட அரசியல் நாடகமென குற்றம்சாட்டியுள்ள மஹிந்தவாதிகள், இந்த நாடகத்தை நிறுத்திக்கொள்ளாவிடின் நாடாளுமன்றத்திற்குள் சிங்கள - பௌத்த கூட்டணி ஒன்று உருவாகும் என எச்சரித்திருக்கின்றனர்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த எச்சரிக்கையை விடுத்திரு க்கின்றார்.

“நாங்கள் சாட்சிகளுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைத் தோம். எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேரும் பதவிவிலகினர். இதனால் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் அடிப்படைவாதிகளே என்ற கருத்துருவாக்கம் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனைய அமைச்சர்கள் மீது நாம் குற்றச்சாட்டுக்களை சுமத்தவில்லை. எனினும் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம் என்பதை வெளிக் காட்ட முஸ்லிம் அமைச்சர்கள் முயன்றனர். இதன் மூலம் தமது வாக்குகளை தக்கவைத்துக் கொள்வ தற்கு அவர் கள் எதிர்பார்த்தனர். சிங்கள மக்கள் மத்தியிலும் நாம் நல்லவர்கள் எனக் காட்டிக்கொள்ள முயல்கின்றனர். இது மிகத்தெளிவான நாடகம்.

இது பிரதமரின் ஆலோசனைக்கு அமைய முஸ்லிம் அமைச்சர்கள் முன்னெடுத்த நாடகமாகும். இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்திச் செல்ல வேண்டாமென நாம் கேட்கின்றோம். அவ்வாறு செயற்படுவ தால் நாடாளுமன்றத் திற்குள் சிங்கள பௌத்த கூட்டணி ஒன்று உருவாகும். அந்த நிலைமைக்கு எம்மைத் தள்ளிவிடாதீர்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நோக்கிலேயே எதிர்ப்புக்களையும் மீறி அரசாங்கம் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் மஹிந்தனந்த அளுத்கமகே குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக தெரிவுக்குழுவை அமைத்து விசாரணை நடத்தும் அரசாங்கத்தின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தும் நோக்கிலான செயற்பாடுகளை ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முன்னெடுப்பதை தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஊடாக அறிந்துகொள்ள முடியும். அசாத் சாலியின் கருத்தின்படி காத்தான்குடியில் 120 வீடுகள் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதெனின் அந்த சந்தர்ப்பத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சு யாரிடம் காணப்பட்டது? சாகல ரத்நாயக்கவும் ரணில் விக்ரமசிங்கவும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். அதனைவிடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஐந்து வழக்குள் தொடரப்பட்டுள்ள நிலையில் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்துகின்றனர்.

இது நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணான விடயமாகும். தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து இதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயவல்வதை அவதானிக்க முடிகின்றது” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்