ரிசாத்துடன் தொடர்ந்தும் மல்லுக்கட்டும் வீரவன்ச

51shares

சதோச வாகனங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய அப்படை மதவாதிகள் பயன்படுத்தி னார்கள் என்பதையும், ரிசாத் பதியுதீன் தீவிரவாதிகளுக்கு ஆதரவு வழங்கினார் என்பதையும் நிரூபிப்ப தற்கு தேவையான சாட்சிகள் தன்னிடம் இருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முடிந்தால் இந்த விடயங்களை பொய்யென நீதிமன்றத்தின் ஊடாக நிரூபிக்குமாறும், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சவால் விடுத்துள்ளார்.

இதே குற்றச்சாட்டை இதற்கு முன்னர் வீரவன்ச முன்வைத்திருந்த நிலையில் அவருக்கு எதிராக பொலிஸ் தலை மையகத்தில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் முறைப்பாடொன்றை பதிவுசெய்திருக்கும் நிலையிலேயே மீணடும் அந்தக் குற்றச்சாட்டை வீரவன்ச முன்வைத்திருக்கின்றார்.

“ இந்த வாகனங்களின் ஜீ.பி.எஸ் அறிக்கையின் ஊடாக அந்த வாகனங்கள் எங்கெல்லாம் பயணித்தன என்பது தெரியவந்துள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவு இதுத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. எனினும் அவர்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு மறைக்கின்றனர். ரிஷாட் பதியுதீனை அவர்கள் பாதுகாக்கி ன்றார்கள்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் எம்மால் திருப்தி அடைய முடியாது. சதோச நிறுவனத்தின் நான்கு வாகனங்களும் அடிப்டைவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டமை ஜீ.பி.எஸ் அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது. அந்த நிறுவனத்தின் வாகனங்கள் விநியோகம் செய்யும் முகாமையாளருக்கு வாகனங்கள் எங்கு செல்கின்றது என்பது தொடர்பில் அறிவிக்கப்படுவதில்லை. ஒரு வாகனத்தில் ஜீ.பி.எஸ் உபகரணம் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் எவரும் பேசுவதில்லை”.

இந்த நாட்டின் இராணுவ புலனாய்வுப் பிரிவு சஹ்ரான் அல்லது தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படைவாதிகளுக்கு ஒரு சதத்தையேனும் வழங்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். முடிந்தால் இந்த விடயத்தை சாட்சியுடன் நிரூபிக்குமாறு நாம் அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.

சஹ்ரானுடன் தேர்தல் காலத்தில் ஒப்பந்தத்திற்கு வந்த ஹிஸ்புல்லா இன்று வெளியில் நடமாடுகின்றார். உயிரி ழந்தவர்களின் உறவுகள் இன்னும் கண்ணீருடன் காணப்படுகின்றனர். அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளை ஒன்று ஸ்ரீலங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. வேறு எந்தவொரு நாட்டினதும் சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளையும் இந்த நாட்டில் இல்லை. இதற்கு ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் இதற்கு தமது அதிருப்தியை வெளிப் படுத் தியுள்ளது.

அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளை இங்கு ஏன் உருவாக்கப்பட வேண்டும். சோபா மற்றும் எக்சா உடன் படிக்கைகளின் ஊடாக இந்த நாட்டிற்கு வரும் அமெரிக்க இராணுவம் இந்த நாட்டில் இழைக்கும் தவறுகளுக்காக அவர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஒப்படைக்கையில்இ கொழும்பில் அமையப்பெறும் அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள்அவர்களுக்காக முன்னிலையாகி அவர்கள் இந்த நாட்டின் சட்டத்தி ற்கு உட்பட்டவர்கள் அல்ல எனவே எம்மிடம் ஒப்படையுங்கள் என கோரிக்கை விடுப்பார்கள். நீதிமன்றம் இதன் போது சிக்கலை எதிர்நோக்கும். அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளை ஒன்றும் தேவையற்ற வித்தில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்கர்கள் இந்த நாடடி;ல் இழைக்கும் தவறுகளில் இருந்து மீள்வதற்காகவே அமைக்கப் படுகின்றது”.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்