சிறிலங்காவின் “அனக்கி” யும் மைக் பொம்பியோ பயணமும்!

  • Prem
  • June 13, 2019
87shares

இலங்கைத்தீவில் கடந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதியில் இறுதியில் வெடித்த மைத்திரி எதிர் ரணில் இழுபறி ஆட்டம் இன்றளவும் பிரசித்தமானது. மகிந்தவை பின்கதவால் கொலுஇருத்தி நிறைவேற்று அதிகாரமா? இல்லை நாடாளுமன்றமா? என்ற வினாவை மையப்படுத்தி நாட்டின் சட்டவாக்க மன்றத்தில் இந்த ஆட்டம் பரபரப்பாகத்தொடர்ந்தது. இந்த ஆட்டத்தில் அடிதடிக்காட்சிகள்; தள்ளுமுள்ளுகள் மிளகாய்த்தூள் தண்ணியடிப்புகள் எல்லாவற்றையும் காணும் பாக்கியம் எல்லாம் மக்களுக்குக்கிட்டியது

பின்னர் ஒருவாறு தெற்கின் அந்த 52 நாள் குழறுபடிகள் ஓய்ந்து நாடுகொஞ்சம் நிமிர முனைந்துபோது ஐ.எஸ்ஸின் கந்தகநாசகார அடி பேரிடியாக வீழந்தது. இப்போது அந்தக்கந்தகநாசகார அதிர்வின் பின்னணியில் மீண்டும் ஒருமுறை நிறைவேற்று அதிகாரமா? இல்லை அமைச்சரவை சக நாடாளுமன்றமா? என்ற இழுபறி வந்துவிட்டது போலத்தெரிகிறது.

இதன் அடிப்படையில் சில கோமாளித்தனங்களுடன்; மைத்திரியின் அதிரடி தீர்மானங்கள் வருகின்றன. அந்தவகையில் உலகின் தலைசிறந்த நகைச்சுவை கலைஞர்களான சார்ளிசப்ளின் மற்றும் மிஸ்டர் பீன் போன்றவர்களை இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு தள்ளி மைத்திரியே முதலாவது இடத்தில் நிற்கும்வகையிலான நகைச்சுவைக்கோட்டோவியங்களும் வந்துவிட்டன.

ஆற்றறோடு அள்ளுண்டு போனாலும் போவேனே தவிர படகுக்காரனுக்கு ஒரு செப்புச்சல்லியும் கொடுக்க மாட்டேன் என்ற மைத்திரியின் புத்திசாலித்தனம் மிகுந்தமுடிவினால் சிறிலங்காவின் அமைச்சரவைக் கூட்டமும் கடந்த செவ்வாயன்று இடம்பெறவில்லை. அதாவது உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்ந்துவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளை உடனடியாக நிறுத்தினால் மட்டும் அமைச்சரவை கூட்டப்படும் என்பது மைத்திரியின் செய்தி. ஐ.எஸ் தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகள் மைத்திரிக்கு ஏன் நாராசமாக தோன்றுகின்றது என்பதற்குரிய காரணங்கள் நீங்கள் அறிந்ததே.

இந்த அமர்வுகள் ஆரம்பித்த நாள்முதல் அதில் தோன்றிய முகங்கள் வழங்கிய வாக்குமூலங்கள் எல்லாம் மைத;திரியை இடம்வலமாக வாங்;கின. வறுத்து எடுத்தன. அவரது அசமந்தங்களே ஐ.எஸ்ஸின் கந்தகநாசகார அடியை தடுக்க முடியாத நிலைக்கு நாட்டைத்தள்ளின என்ற பொருள்பொதிந்த தெளிவான செய்திகளும் சொல்லப்பட்டன. இதனால் வெகுண்டெழுந்த அவர் அந்த அமர்வுகளை முடக்க முனைந்தார்.

ஆனால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின அமர்வுகளை நிறுத்தாவிட்டால் அமைச்சரவைக்கூட்டமாட்டேன் என மைத்திரி சொன்னாலும் அவரது தீர்மானத்தை மீறி, இன்று தெரிவுக்குழு அமர்வு இடம்பெற்றிருக்கிறது. ஆகமொத்தம் கடந்த வருட ஒக்டோபர் மாத இறுதில் தென்பட்டதைப்போன்ற ஒரு மினி இழுபறிக்காட்சி இப்போது உருவாகிவி;ட்டது. இதனால் இலங்கைத்தீவு மீண்டும் ஒரு முறை Anarchy அனக்கி எனப்படும் அரசின்மை சார்ந்த அரசியல் கோட்;பாட்டுத்தளத்துக்குள் தள்ளப்படஏதுவாகிவிட்டது.

எது எப்படியோ கடந்த ஒக்டோபர் மாதத்தில் இலங்கையில் உருவான Anarchy அனக்கி நிலைக்கும் இப்போது உருவாகியுள்ள அதனையொத்த கருக்கட்டல் நகர்வுக்கும் உரிய முக்கியமான சூத்திரதாரியாக குடைபிடிப்பு புகழ் மைத்திரி மாறியிருக்கிறார்.

ஆனால் இலங்கையில் இவ்வாறு ஒரு அரசின்மை சார்ந்த அரசியல் கோட்;பாட்டுத்தளம் மீண்டும்தோன்றினாலும் மறுதலையாக அந்தத்தீவில் இபோது நாளுக்குநாள் சிங்களப்பௌத்தம் சார்ந்த வாதம்- வலிப்பு- பித்தங்கள் எல்லாம் ஏறுமுகமாகி வருகின்றன. எதிர்வரும் தேர்தல் களத்தில் கோட்டபாயவை முன்னுக்குத்தள்ளும்வரை இந்த ஏறுமுகங்கள் தொடரக்கூடும். இலங்கையின் அரசியல்களம் சீத்துவம் இவ்வாறுதெரிய இந்துமாகடல் பெரியண்ணன் வீட்டில் இருந்து மோடி வந்து சென்றபின்னர், அமெரிக்கா என்ற பெரிய இடத்தில் இருந்து அதன் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் இலங்கையில் இந்த மாதம் கால்வைப்பதை உறுதிப்படுத்தும் கட்டியங்கள் வந்துள்ளன. இராஜாங்கத்திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஒற்றாகஸ் நேற்று இந்தச்செய்தியை வெளியிட்டார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 30 வரை இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தனது பயணத்தை மேற்கொளும் பொம்பியோ முதலில் இந்தியாவுக்குச் செல்கிறார் பின்னர் அங்கிருந்து இலங்கை ஜப்பான் தென்கொரியா என அவரது பயணநிரல் உள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ முன்னர் சீ.ஐ.ஏ எனப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வு முகமையை சேர்ந்தவர் அவ்வாறான முகம் இப்போது ஐ.எஸ் தாக்குதலுக்குப்பின்னர் இலங்கைக்கு செல்கிறது.

இறுதியாக கடந்த 2015மே யில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது ரணில் மைத்திரி நல்லாட்சி காலம் இருந்தது அதற்கு முன்னர் 2004இல் இலங்கையில் ஆழிப்பேரலை அடித்தபோது அப்போதை அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொலின் பவல் இலங்கைக்குச்சென்றிருந்தார்.

இப்போது 2015 இல் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிசென்ற பின்னர் சற்றேறக்குறைய 4 வருடங்களுக்குப்பின்னர் மீணடும் ஒரு முறை இராஜாங்க செயலாளர் பொம்பியோ செல்லவுள்ளார்.

சரி இப்போது ஒரு மனக்கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.2004 இராஜாங்க செயலாளர் கொலின் பவல் இலங்கைக்குச் சென்றபின்னர் 2015மே ஜோன் கெரிசென்றபோது இருந்தகால இடைவெளி ஏறக்குறைய 11 வருடங்கள் இப்போது ஜோன் கெரியின் 2015பயணத்துக்கும் மைக் பொம்பியோவின் பயணத்தக்கும் இடையிலான காலஇடைசெயி 4 வருடங்கள் மட்டுமே. அப்படியானால் இங்கு நெருககமாவது கால இடைவெளி மட்டுமா? கொழும் வோசிஙடன் உறவுகளுமா? இந்த வினாவுக்கு நீங்களே மனதில் விடையை காணமுயலுங்கள்.