மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கவுள்ள இஸ்லாமிய அமைச்சர்கள்?!

173shares

மகாசங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு மதிப்பளித்து, மீண்டும் தங்களது அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பது தொடர்பில், அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராயவுள்ளனர்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தின்போது, இது குறித்து தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க