யாழில் முப்பது ஆண்டுகளுக்கு முன் தடைப்பட்ட தட்டிவான் சேவை மீண்டும் சிற்றூர்திச் சேவையாக உதயமானது!

  • Jesi
  • June 16, 2019
445shares

புதிய அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டு வந்ததாகக் கூறுபவர்கள் தற்போது தேர்தல் வரும் போது அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என கூற முற்பட்டிருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அச்சுவேலி மூளாய் பகுதிக்கான சிற்றூர்தி சேவையினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

இதன் போது உரையாற்றிய டக்களஸ் தேவானந்தா கடந்த காலங்களில் மக்கள் தலைவர்களைத் தெரிவு செய்து எவ்வாறான ஏமாற்றங்களை பெற்றுக்கொண்டனர் என்பதை உணர்ந்து எதிர்வரும் தேர்தலில் சரியான தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்றார், நான் ஒருபோதும் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என கூறப்போவதில்லை எனக்கு மக்கள் ஆணை கிடைத்தால் நான் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை தீர்த்து வைப்பேன் என்றார்.

இப்பகுதி மக்களுக்கு ஒரு சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் 30 வருடங்களின் பின்னர் அச்சுவேலி, மூளாய்க்கு இடையிலான சிற்றூர்தி சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது என்றார்.

இதையும் தவறாமல் படிங்க