திருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படையின் சிறப்பு அணி!

  • Jesi
  • June 18, 2019
697shares

அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு கடற்படையை சேர்ந்த படையணியினரால் திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பலன்ஸ் ஸ்ரைல் 2019/01 திட்டத்தின் கீழ், கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி என்ற பெயரில் இந்த பயிற்சிகள் கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

மூன்று வாரங்களுக்கு நீடிக்கவுள்ள இந்தப் பயிற்சி, எதிர்வரும் ஜூலை 05ஆம்திகதி நிறைவடையவுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணியைச் சேர்ந்த 24 பேர் மற்றும், 4 ஆவது அதிவேக தாக்குதல் அணியைச் சேர்ந்த 12 பேர் என மொத்தம் 36 சிறிலங்கா கடற்படையினர் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, அமெரிக்க இராணுவத்தின் 19 ஆவது சிறப்பு படையைச் சேர்ந்த வான்வழி தரையிறக்க அணியின் 10 பயிற்சி நிபுணர்கள் திருகோணமலைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க