தென்னாசியாவை நெருங்கிய பயங்கர ஆபத்து; இலங்கையில் தோன்றிய அறிகுறி!

  • Shan
  • June 18, 2019
183shares

தென்னாசியாவுக்கு புதியவகை அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நேபாள நாட்டின் துணைப் பிரதமரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஈஸ்வர் போக்ரேல் தெரிவித்துள்ளார்.

இதற்கு இலங்கையில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் ஓர் அறிகுறியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கத்மண்டுவில் கடந்தவாரம் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கு நிகழ்வு ஒன்றினை அந்நாட்டு இராணுவத்தினர் முன்னெடுத்திருந்தனர். இதில் பாதுகப்பு உயர் மட்டத்தினரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போதே ஈஸ்வர் போக்ரேல் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

”உலக நாடுகளிலும் எமது அண்டை நாடுகளிலும் அப்பாவிகள்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நாம் வருந்துகிறோம். அண்மையில் இலங்கையில் நடந்த தாக்குதல் தென்னாசியாவுக்கு ஏற்பட்டுள்ள புதியவகை பயங்கரவாத அச்சுறுத்தலாகும். இதனை எதிர்கொள்வதற்கு உலகிலுள்ள நமது நட்பு நாடுகள் கையாளும் நடவடிக்கைகளை நாம் தெரிந்திருக்கவேண்டும். முன்னெப்போதுமே இல்லாத அளவுக்கு இந்த நூற்றாண்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுகின்றது. அது அப்பாவி மக்களை மோசமாக பாதிக்கிறது. பயங்கரவாதத்தை நாம் பழங்கால போர் முறைகளால் மட்டும் எதிர்கொள்ளமுடியாது. உலக பாதுகாப்பிற்கும் மனித நேயத்திற்கும் மிகப்பெரிய சவாலாக உள்ள பயங்கரவாதத்துக்கு எதிராக போராட பிராந்திய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க